1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2017 (13:40 IST)

ஓ.பிஎ.ஸ் அணியிலிருந்து விலகிய இரண்டு முக்கிய நிர்வாகிகள்

ஓ.பிஎ.ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய நிர்வாகிகள் திடீரென விலகி, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சசிகலா அணியில் இணைந்தனர்.


 

 
ஓ.பன்னீர்செல்வம் அணி சசிகலாவிடம் இருந்து அதிமுக கட்சியை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகிறது. ஓ.பி.எஸ் அணி 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் என குறைந்த எண்ணிக்கை உடைய அணியாக உள்ளது. இருந்தும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் அணியில்தான் உள்ளனர்.
 
தற்போது இரண்டு முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியுள்ளனர்.  நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் இன்று துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் இணைந்தனர்.
 
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் எம்.பி.க்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.