சாலையில் கிடந்த தங்க துண்டுகள்: கிராமமே தங்கத்தை தேடுவதால் பரபரப்பு!
சாலையில் கிடந்த தங்க துண்டுகள்
ஓசூர் அருகே சாலையில் சில தங்க துண்டுகள் கிடந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்க துண்டுகளை தேடி அலைவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஓசூர் அருகே உள்ள பாகலூர்-சர்ஜாபுர சாலையில் இரண்டு தங்க துண்டுகள் கிடைத்தன. இதனை அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து இன்னும் தங்க துண்டுகள் கிடைக்கலாம் என்ற ஆர்வத்தில் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் திடீரென சாலையில் குவிந்தனர்
அனைவரும் சாலையில் கீழே குனிந்தபடி தங்க துண்டுகளை தேடி கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டது
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களை அந்த பகுதியில் இருந்து செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். திடீரென சாலையில் தங்க துண்டுகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்