செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (18:42 IST)

கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பி ஓட்டம்: சென்னையில் பரபரப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத் துறையினர் தேடி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வரும் நிலையில் குறிப்பாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தமிழகம் திரும்பிவர்களை சுகாதாரத்துறையினர் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இருவரும் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள். இதனையடுத்து காவல்துறையினர் தப்பி ஓடிய இருவரையும் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். தப்பி ஓடிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் மேலும் பலருக்கு கொரோனா தோற்று பரவும் அபாயம் இருப்பதால் அவர்களை விரைவில் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.