1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2020 (17:42 IST)

போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய இருவர் கைது !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இது அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிக்க வேண்டும் என மக்களுக்குகடுமையான உத்தரவிட்டுள்ளனர். அதை மாநில போலீஸாரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசின் உத்தரவையும் மீறி சில வீட்டை விட்டு வெளியேறி சென்று போலீஸாருகு தொந்தரவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறி  வெளியே சுற்றியதால், தமிழகம் முழுவதும் 17,668  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11,585  வாகங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

இந்த நிலையில், ஆபத்தை உணராமல் மக்கள் தொடர்ந்து சமூக விலகலை தொடர மறுக்கின்றனர்.  மதுரையில் உள்ள முக்கிய சாலையாக காமராஜ் சாலையில் போலீஸாரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்ட  கண்காணிப்பில் உள்ளது. இங்கு நாகராஜ் என்பவரும், ஒரு 17 வயது வாலிபரும் சாலையின் நடுவே உள்ள தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாண்டு கொண்டிருந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதுகுறித்த தகவல் அறிந்த தெப்பகுளம் போலீஸ்ர் இருவரையும் கைது செய்து 5 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.