1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (15:52 IST)

2 வயது குழந்தையை குடிக்க வைத்த குடிகார்கள் கைது

2 வயது குழந்தையை குடிக்க வைத்த குடிகார்கள் கைது

சென்னை அம்பத்தூரில் இரண்டு வயது குழந்தைக்கு மது ஊட்டிய குற்றத்திற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
அம்பத்தூரைச் சேர்ந்த தனலெட்சுமியின் மகன் தானு. 2 வயதான அந்த சிறுவன் விளையாடச் சென்ற இடத்தில், மது குடித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் தானுவுக்கு மதுவை ஊட்டியுள்ளனர்.
 
பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சிறுவன் தானுவின் உடல்நிலை சரியில்லாததைக் கண்ட தனலெட்சுமி உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
 
தானுவை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ சிறுவனுக்கு மது குடிக்க வைத்திருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தனலெட்சுமி அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் தானுவை மது குடிக்க வைத்த செல்வம், பழனி என்ற இருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.