1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (14:00 IST)

கட்டிபிடி ஜீலியை வெளியேற்றுங்கள் - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஜூலியின் நடவடிக்கைகள், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஜூலியின் நடவடிக்கைகள், அந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பார்க்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. நடிகர் ஸ்ரீ-யிடம் ‘நீ எனக்காக இங்கே இரு’, ‘என்னைப் பற்றி நினைத்துப் பார்’, என்னைக் கட்டிப்பிடிக்கக் கூட இங்கே ஆள் இல்லை என்றெல்லாம் பேசி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார்.
 
அதன் பின், அவரிடம் ஆர்த்தி சண்டை போடும் போதெல்லாம் அழுது வடிந்து ஒப்பாரி வைத்தார். மேலும், இயல்பாக இல்லாமல் எதிலும் கொஞ்சம் அதிகமாக நடிப்பது போலவே அவர் செயல்பட்டு வருகிறார். ஒருவேளை அதுதான் அவரின் இயல்பான நடத்தையா என்பது தெரியவில்லை.
 
சென்ற வாரம் அவர் வெளியேகிறார் என கமல்ஹாசன் கூறிய போது,  அனைவரையும் பயங்கரமாக கட்டிப்பிடித்து சோகத்தை வெளிப்படுத்தினார். தற்போது அவர் நடிகர் சக்தியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் ஜூலியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
 
“உணர்ச்சிவசப்பட்டுக் கட்டிப்பிடிப்பவள் தோழி... கட்டிப்பிடிப்பதற்காகவே உணர்ச்சிவசப்படுறவ ஜூலி” என்று ஓவியா பக்தன் என்கிற பெயரில் டிவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மேலும், ‘ஓவியா நேர்மையாக இருக்கிறார். ஆனால், ஜூலி நடிக்கிறார். முன்பு ஒன்றும் பின்பு ஒன்றும் பேசுகிறார்’ என ஒருவர் கூறியுள்ளார்.


 

 
‘ஜூலிக்கு என்ன ஆயிற்று, ஏன் எல்லோரையும் இப்படி கட்டிப்பிடித்துக் கொண்டே இருக்கிறார்?’ என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், பலரும் ஜூலிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.