1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (11:21 IST)

காலியாகும் நாம் தமிழர் கட்சி: டிவிட்டர் டிரெண்டிங்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #காலியாகும்_நாதக என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாகி வருகிறது. 

 
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அவரை மேடை ஏறி திமுக தொண்டர் ஒருவர் அடிக்க சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காவல் துறை அனுமதியுடன் நடந்த இந்த கூட்டத்தின்போது பேச்சாளர் ஹிம்லர் என்பவர் அரசை அவதூறாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஒரு கட்டத்தில் அவர் திடீரென மேடை ஏறி நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரை அடிக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திமுக தொண்டரை அப்புறப்படுத்தி பேச்சாளரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #காலியாகும்_நாதக (நாம் தமிழர் கட்சி) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாகி வருகிறது.