1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மே 2020 (08:24 IST)

கொரோனாவை விரட்ட உயிரோடு புதைந்து ரிஸ்க் பூஜை செய்த சாமியார்

யிரோடு புதைந்து ரிஸ்க் பூஜை செய்த சாமியார்
கொரோனா வைரஸை பூமியில் இருந்து விரட்ட மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் மில்லியன்கணக்கான டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் கொரோனாவுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கொரோனாவை மிக எளிதாக ஒரே ஒரு பூஜை செய்து விரட்ட தூத்துக்குடி சாமியார் ஒருவர் செய்த முயற்சியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உலக விஞ்ஞானிகளே கொரோனாவை விரட்ட திணறிக்கொண்டிருக்கும் போது இந்த சாமியார் தன்னுடைய உடலை பூமிக்குள் புதைத்து கொண்டு அதைச் சுற்றி நெருப்பு பற்ற வைத்துக் கொண்டு பூஜை செய்கிறார். இந்த பூஜையால் உலகில் இருந்து கொரோனா ஒழிந்துவிடும் என்று அவர் கூறுகிறார். இந்த பூஜையை பார்க்க அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை பூமியில் இருந்து வெளியே எடுத்து அவருடைய ஆசிரமத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த சாமியார் ஏற்கனவே கேஆர் விஜயா உள்பட ஒரு சில நடிகைகளை அழைத்து மழைக்காக பூஜை செய்துள்ளார் என்பதும், நூற்றுக்கணக்கான கிலோ மிளகாய் வத்தலை தீயில் போட்டு எரித்தும், பாகற்காய்களை குங்குமத்தை தடவியும் இவர் ஏற்கனவே பூஜை செய்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது 
 
கொரோனா வைரசை எந்த பூஜையும் செய்து விரட்ட முடியாது என்றும் அதற்கு தகுந்த மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்