வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (17:19 IST)

தண்ணீர் பஞ்சத்தை குறித்து எடப்பாடி அரசை வெளுத்து வாங்கும் டி.டி.வி

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், கம்மாய் ஆகிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018 ஆம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் நீர்நிலைகள் எல்லாம் தூர்வாரப்படவில்லை எனவும், ஒவ்வொறு வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் ஆளுயரத்திற்கு புதர் மங்கி கிடக்கிறது எனவும் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பாண்டு குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து டி.டி.வி தினகரன், தமிழகம் முழுவதும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறார்கள் என்றும், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்காத மாநில அரசு, மக்களை திசை திருப்பவே இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தற்போது எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை மாநில அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என கூறியிருக்கிறார்.

மேலும் டி.டி.வி. தினகரன், இனி வரும் ஆண்டில் என்னென்ன நீர்நிலைகள் குடிமராமத்து பணிகளின் கீழ் சீரமைக்கப்படப் போகிறது என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.