திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (08:41 IST)

மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன் - பின்னணி என்ன?

திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரிடம் அதிமுக துணைப் பொதுச்செயாலாளர் டி.டி.வி. தினகரன் ஆசி பெற்றார்.


 

 
திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரிடம் பலரும் சென்று ஆசிர்வாதம் வாங்கி வருவது பல வருடமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த், இளையராஜ என பல சினிமா பிரபலங்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். பச்சை நிற சால்வை அணிந்து கொண்டு ஒரு இடத்தில் மௌனமாக அமர்ந்திருக்கும் அவரிடம் ஆசிபெற்றால் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகிவிடும் என பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தலையை குனிந்த படி கீழே பார்த்துக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து நம்மை பார்த்துவிட்டால் யோகம் அடிக்கும் என்பது நம்பிக்கை...
 
அடிக்கடி மூக்குப்பொடி பழக்கம் அவரிடம் இருப்பதால், அவரை மூக்குப்பொடி சித்தர் என எல்லோரும் அழைத்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், அவரை சந்திக்க நேற்று தினகரன் திருவண்ணாமலை வந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று அவரை கையெடுத்து கும்பிட்டார் தினகரன். அவர் முன்னால் சற்று நேரம் அமர்ந்துவிட்டு அவரிடம் ஆசிபெற்றார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பி சென்றார். 
 
அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து பல சிக்கல்களை தினகரன் சந்தித்து வருகிறார். எனவே அதிலிருந்து மீள்வதற்காகவே மூக்குப்பொடி சித்தரின் ஆசியை பெற அவர் வந்ததாக தெரிகிறது.