1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (15:44 IST)

டிடிவி தினகரனுக்கு 2-வது இடமா? கடைசி இடமா?: ஸ்டாலின் பொளேர்!

டிடிவி தினகரனுக்கு 2-வது இடமா? கடைசி இடமா?: ஸ்டாலின் பொளேர்!

ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், பாஜகவின் கங்கை அமரன் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.


 
 
இந்நிலையில் ஓட்டுப்போடும் மின்னணு இயந்திரத்தில் பாஜகவின் கங்கை அமரன் முதலிடத்திலும், டிடிவி தினகரன் இரண்டாவது இடத்திலும், மதுசூதனன் 4-வது இடத்திலும் திமுகவின் மருத்துகணேஷ் 5-வது இடத்திலும் உள்ளனர்.
 
இதனையடுத்து இன்று காலை திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது இடமோ? மூன்றாவது இடமோ? எதுவாக இருந்தாலும் டிடிவி தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என்றார்.
 
முன்னதாக சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் மீதும், தேர்தல் அலுவலர் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தோம். எங்களது புகார் நியாயமாக இருந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் நியாயமாக நடப்பதாக சொல்லி இருக்கிறது. நாங்களும் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.