ஜக்கையன் தாவல் எதிரொலி: தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் திடீர் இடமாற்றம்


sivalingam| Last Modified வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (05:25 IST)
தினகரன் அணிக்கு ஆதரவு கொடுத்து வரும் எம்.எல்.ஏக்கள் உண்மையிலேயே ஆதரவு கொடுக்கின்றார்களா? அல்லது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நேற்று ஒரே ஒரு நாள் கவர்னரை பார்க்க புதுச்சேரியில் இருந்து அழைத்து வந்ததிலேயே ஒரு எம்.எல்.ஏ அணி தாவிவிட்டார்.


 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன், உடனடியாக புதுச்சேரி சொகுசு விடுதியில் இருந்த தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கர்நாடக மாநிலம், குடகு மலை பகுதிக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஜக்கையன் போலவே இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் அணி தாவ தயாராக இருப்பதாக தினகரன் சந்தேகப்படுவதால் இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தின் குடகு மலை பகுதிக்கு அனைவரும், நேற்று புறப்பட்டதாகவும்,. அங்கு இவர்கள் தங்க 'விண்ட் பிளவர்' சொகுசு விடுதி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் தான் தங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :