ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:36 IST)

ஜெயலலிதாவின் எதிரியிடம் சரணடைந்த தினகரன்!

ஜெயலலிதாவின் எதிரியிடம் சரணடைந்த தினகரன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காஞ்சி மடத்தின் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்தார். சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்த ஜெயலலிதா கடைசி வரை ஜெயேந்திரருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தார்.


 
 
ஜெயலலிதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் காஞ்சி மடத்தின் சார்பில் பலர் முயற்சி செய்தும் ஜெயலலிதாவிடம் தோற்றுதான் போனார்கள். கடைசியில் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றி தான் ஜெயேந்திரர் விடுதலை என அறிவிக்கப்பட்ட்டார். இந்த வழக்கு தமிழகத்தில் நடந்திருந்தால் ஜெயலலிதா ஜெயேந்திரரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பார்.
 
ஜெயலலிதா ஜெயேந்திரர் மீது பொய் வழக்கு தொடர்ந்தார் எனவே அவரிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அந்த அளவுக்கு ஜெயேந்திரர் விவகாராத்தில் ஜெயலலிதா கண்டிப்புடன் இருந்தார்.
 
ஆனால் தற்போது ஜெயலலிதா எதிர்த்த ஜெயேந்திரரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அவரது ஆதரவை வேண்டி தினகரன் சென்றது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள இரட்டை இலை விவகாரத்தில் உதவி புரிய ஜெயேந்திரரின் காலில் தினகரன் விழுந்துள்ளார் என செய்திகள் வருகிறது.
 
மேலும் இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா பற்றி ஒருமையிலும் தினகரன் பேசியதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் காஞ்சி மடம் இந்த விவகாரத்தில் தினகரனுக்கு எந்தவித உறுதியும் அளிக்காமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அனுப்பி வைத்துள்ளது.