ஆர்.கே.நகரில் தினகரன் - தீபா போட்டியா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அவருடைய மரணம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் ஆணையம் இந்த தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த ஒருசில நிமிடங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்கே நகரில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவருக்கு ஓபிஎஸ் அணியினர் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தனது வேட்பாளரை தேர்வு செய்ய இம்மாதம் 12ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளது. இந்நிலையில் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாலர் டி.டி.வி. தினகரன் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தினகரன், 'அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என கூறினார்.
எனவே கிட்டத்தட்ட தீபா-தினகரன் போட்டி உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.