வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (14:36 IST)

நமது எம்.ஜி.ஆரை டேக் ஓவர் செய்த தினகரன் - எடப்பாடி பழனிச்சாமிக்கு வைத்த செக்

அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான நமது எம்.ஜி.ஆரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகள் புறக்கணிக்கப்பட்டு வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சில மாதங்களாக, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்தி வருகிறார். இது தினகரனின் ஆதரவாளர்களான 35 எம்.எல்.ஏக்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, கட்சியில் தினகரனுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தி வந்தனர்.
 
ஆனால், அதைக் கொண்டு கொள்ளாமல் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால், அவரை 2 மாத காலம் அமைதி காக்கும் படி சசிகலா கேட்டுக்கொண்டதால், ஆகஸ்டு 5ம் தேதி நான் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான எம்.ஜி.ஆரில் எடப்பாடி பழனிச்சாமி குறித்த செய்திகள் கடந்த 2 நாட்களாக வெளிவருவதில்லை என கூறப்படுகிறது. நேற்று கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த செய்திகள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், நேற்று, தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செய்தி முதல் பக்கத்திலேயே இடம் பெற்றது. மேலும், சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை என்ற செய்திகளே பிராதானமாக இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.
 
இந்த விவகாரம் எடப்பாடி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்டு 5ம் தேதி வரை பொறுமையாக இருப்பேன் எனக்கூறிய தினகரன், அதற்குள் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.