திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (12:11 IST)

தமிழையும், ஆன்மீகத்தையும் உயரத்திற்கு எடுத்து சென்றவர் இளையராஜா: டிடிவி தினகரன் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்வில் கூறியிருப்பதாவது
 
இசையை திரைப்படங்கள் வழியே உலகம் முழுக்கக் கொண்டு சென்று சர்வதேச இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் இன்று.
 
தனது இசையால் அனைத்து உள்ளங்களையும் வசப்படுத்தி, அனைவரது உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் திரு. இளையராஜா அவர்கள் நீடூடி வாழ வேண்டும் என வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன்.
 
தனது இசை வாயிலாக தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் மேலும் பல உயரங்களுக்கு திரு.இளையராஜா அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விரும்புகின்றேன்
 
 
Edited by Mahendran