வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:13 IST)

தொழில் அதிபராகும் TTF வாசன்… பைக் ரைடர்களுக்கான புதிய கடை!

யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, சமீபத்தில், மதுரை  ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150 கிமீ வேகத்தில்  பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார்.  இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட  டிடிஎஃப் வாசன்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது.

இதுபோல அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பி பிரபலமான அவர், இப்போது புது தொழிலில் இறங்கியுள்ளார். TTF Pit shop எனும் பைக் ரைடர்களுக்கான உபகரணங்களை விற்கும் ஒரு ஷோ ரூமை ஆரம்பிக்க உள்ளார். இது போல இன்னும் பல தொழிலில் இறங்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.