செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (13:23 IST)

மோடியை அடுத்து சசிகலாவும் மறுப்பு? கடும் அதிருப்தியில் ஓபிஎஸ்..!

சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் முயற்சித்ததாகவும் ஆனால் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சசிகலாவை சந்திக்க சமீபத்தில் அவர் வைத்திலிங்கம் மூலம் முயற்சி செய்ததாகவும் ஆனால் இப்போதைக்கு தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சசிகலா ஓ பன்னீர்செல்வதை சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் தேர்தல் அறிவிப்பு வழியாகட்டும், அப்போதைய சூழல்களை பொறுத்து யார் யாரை சந்திப்பது என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று சசிகலா தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறியுள்ளதாக தெரிகிறது 
 
மோடியையும் பார்க்க முடியாமல் சசிகலாவையும் பார்க்க முடியாமல் அதிருப்தியின் உச்சத்தில் ஓபிஎஸ் இருப்பதாகவும் இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva