வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (16:35 IST)

பயணிகளிடம் சில்லரை கேட்டு தொந்தரவு செய்ய கூடாது: நடத்துநர்களுக்கு அறிவுரை..!

மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை தெரிவித்துள்ளது

மேலும் பயணிகள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதித் தொகையை வழங்க வேண்டும் என்றும்,  பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும்,  இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran