Daily Horoscope
✕

திருநங்கை குத்திக் கொலை: தாம்பரம் அருகே பரபரப்பு

திருநங்கை குத்திக் கொலை: தாம்பரம் அருகே பரபரப்பு

Written By Suresh
Updated: வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (08:33 IST)
தாம்பரம் அருகே நள்ளிரவில் திருநங்கை குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


தாம்பரம் – பெருங்களத்தூர் இடையே உள்ள ரயில் தண்டவாள பகுதியில் நள்ளிரவுவில், திருநங்கை ஒருவர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன், தகறி அழுதபடி தண்டவாள பகுதியில் இருந்து சாலைக்கு ஓடி வந்து கீழே விழுந்தார்.
 
இதைப் பார்த்த அக்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவ குழுவினர், அந்த திருநங்கையை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
 
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்தவமனைகு அனுப்பி வைத்தனர்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட திருநங்கையின் பெயர் பூஜா என்ற சுரேஷ்பாபு என்பதும், அவருக்கு வயது 28 என்பதும், அவர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
 
திருநங்கை பூஜாவை கொலை செய்தது யார் என்பது குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments