1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (13:57 IST)

பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை - டிராபிக் ராமசாமி வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிறுவனத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மர்மம் நிலவுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவெ, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என சென்னையை சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.