1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (11:53 IST)

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 10 கோடீஸ்வரர்கள்.. தமிழகத்தில் மட்டும் 5 பேர்..!

முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 10 கோடிஸ்வரர்களில் ஐந்து பேர் தமிழகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் புதுவை உள்பட ஒரு சில பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 10 பேர் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கோடீஸ்வரர்களில் ஐந்து பெயர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியமான தகவலாகும்.

1. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நகுல்நாத் என்பவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு 717 கோடி என்று தெரிவித்து கோடீஸ்வரர்களில் முதலாவது ஆக உள்ளார்

2.  தமிழகத்தில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 662 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

3. சிவகங்கையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் ரூ.304 கோடி  சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

4.  உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா ரூ.206 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

5. உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமி ஷா ரூ.206 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

6. உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சிவேட்பாளர் மஜித் அலி ரூ.159 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

7.  வேலூரில் பாஜ.க. சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

8. கிருஷ்ணகிரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் ரூ.135 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

9. மேகாலயாவின் காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் எச்.பாலா ரூ.125 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

10. சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்  ரூ.96 கோடி சொத்து மதிப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்

Edited by Siva