வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 மே 2016 (12:02 IST)

வெப்பத்தின் தாக்கம் குறையுமா? - நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்

கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 

 
தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் கொடுமைக்கு இந்தாண்டு பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியே வர தயங்குகின்றனர். இரவு நேரங்களிலும் கடும் புழுக்கம் காணப்படுகிறது.
 
தமிழகத்தின் சராசரி வெப்பநிலை 104 டிகிரியாக பதிவாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் இதுவரை வெயில் கொடுமைக்கு 317 பேர் இறந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
 
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பதிவான வெப்பநிலை வேலூர் 106, மதுரை 105, சென்னை 105, திருச்சி 104, புதுச்சேரி 104, நெல்லை 103 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய ‘கத்திரி’ வெயில் காலம் நாளை சனிக்கிழமையன்று (மே 28) விடைபெற உள்ளதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.