வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (20:24 IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழா: முழு தகவல்கள்..!

suseendhram
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழா: முழு தகவல்கள்..!
சுசீந்திரம் நகரில் உள்ள தாணுமாலயசாமி  கோவிலில் சிவராத்திரி விழா நாளை நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆண்டு சிவராத்திரி நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 
 
அந்த வகையில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் நாளை காலை பூஜையுடன் விழா நடைபெற உள்ளது என்றும் ஆறு மணிக்கு அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு கருட வாகனத்தில் கோவில் சிவனும் பெருமாளும் வலம் வருவார்கள் என்றும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
மேலும் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீபலி விழா நடைபெறும் என்றும் சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran