செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:38 IST)

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில்  தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், மேற்கு ராஜஸ்தான் மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்கான சூழல் சாதகமாகியுள்ளது.

இதே நேரத்தில், ஆந்திர கடற்கரையிலிருந்து தென் கடலோர  மியான்மர் வரையிலான பகுதிகளில் சூறாவளி சுழற்சி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் வரும் 28 ஆம் தேதி மிதமான மழை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva