வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (06:16 IST)

நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவர்களுக்கு சில டிப்ஸ்கள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை அதாவது மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. பள்ளி இறுதி படிப்பு மற்றும் மேற்கல்விக்கு முக்கியமானதாக கருதப்படும் இந்த தேர் தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாளை எழுதவுள்ளனர்.




இந்த  தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக்காண பணிகளை செய்து வருகிறார்கள்.

தேர்வு மைய வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் கொண்டு செல்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வின்போது துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 2 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு சில அறிவுரைகள்:

1. தேர்வுக்கு செல்லும் போது, காலை உணவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

2. தேர்வுக்கு முந்தைய நாளில், 15 முதல், 30 நிமிடம் வரை, உடற்பயிற்சி செய்வது நல்லது. அது, உடம்பையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

3. தேர்வு நேரத்தில், ஐந்து மணி முதல், ஆறு மணி நேரம் வரை துாங்குவது நல்லது.
4. தேர்வுக்கு செல்லும் போது, எழுதி பழகிய, பேனாக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

5. தேர்வு துவங்கும், அரை மணி நேரத்திற்கு முன், புத்தகம் படிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்.

6. தேர்வு துவங்குவதற்கு, 15 நிமிடத்திற்கு முன், வினாத்தாள், விடைத்தாள் கொடுப்பர். அதில், 12 நிமிடத்திற்கு, வினாத்தாளை கவனமாக படித்து, நன்கு தெரிந்த கேள்விகளை தேர்வு செய்து, மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மீதமுள்ள, மூன்று நிமிடத்தில் விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும்.

7. பயம், பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதினால், நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்