வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (12:52 IST)

உச்சத்தில் தக்காளி விலை; ஒரு கிலோ 100 ரூபாய்!

உச்சத்தில் தக்காளி விலை; ஒரு கிலோ 100 ரூபாய்!

தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளின் தற்போதைய கவலையாக இருப்பது தக்காளியின் விலையேற்றம் தான். முன்பெல்லாம் 100 ரூபாய் கொண்டு போனால் வீட்டுக்கு தேவையான காய்கரிகள் அனைத்தும் வாங்கிவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால் தற்போது 100 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வாங்க முடிகிறது.


 
 
சென்ற வருடம் வெங்காயத்தை போல அதன் விலையும் கண்ணீர் வர வைத்தது. அதன் பின்னர் பருப்பு விலை பர பர என எகிறியது. இந்நிலையில் இந்த வருடம் தக்காளி விலை தாறுமாறாக ஏறுகிறது.
 
கடந்த மாதம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து தற்போது 100 ரூபாயை அடைந்துள்ளது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் இல்லத்தரசிகள் அதிகம் கவலை கொண்டுள்ளனர்.
 
தக்காளியின் இந்த தொடர் விலையேற்றத்துக்கு காரணம் தக்காளியின் வரத்து குறைவு தான் என்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் கோயம்பேடுக்கு தக்காளிகள் வருகின்றன. அங்கு உற்பத்தி குறைவால் தக்காளி வரவு குறைந்துள்ளது. பாதிக்கு பாதி தக்களியின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.