திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:27 IST)

ஒரு கிலோ 30 ரூபாய் தான்.. வாங்க ஆளில்லாமல் இருக்கும் தக்காளி..!

Tomato
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் என்று இருந்த நிலையில் தக்காளி விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ 30 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது. 
 
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராம் கணக்கில் வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
100 ரூபாய்க்கு மேல் பல நாட்களாக தக்காளி விலை இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் தக்காளி வியாபாரிகள் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறினர். 
 
இந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 30 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதையும் வாங்க ஆளில்லாமல் இருப்பதாக தக்காளி வியாபாரிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
 
Edited by Siva