1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Raj Kumar
Last Modified: திங்கள், 20 மே 2024 (17:02 IST)

வைகாசி விசாகம் நாளில் சாப்பிட வேண்டிய உணவுகள்! சாப்பிட கூடாத உணவுகள்!

முருக பெருமான் அவதரித்த நாளானது ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம் என்னும் விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு உகந்த நாட்கள் பல இருந்தாலும் கூட அதில் சிறப்பு மிக்க நாளாக வைகாசி விசாகம் இருக்கிறது.



முருகன் தமிழ் கடவுள் என்பதால் தமிழர்களுக்கு நெருக்கமாக கடவுளாக இருக்கிறார். எனவே இந்த வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் இருக்கும்.

விரதம் இருப்பவர்கள் அதிகப்பட்சம் சாத்வீகமான உணவுகளைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை:
காலை நேரம்தான் விரதத்தை துவங்குவதற்கான நேரம். எனவே நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருப்பதற்கு வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். முந்திரி, பாதாம் போன்றவற்றை உண்ணலாம். மேலும் இனிப்பு சேர்க்காமல் தயிர் உண்ணலாம். உணவுகளை பொறுத்தவரை கிச்சடி அல்லது நெய் விட்ட பருப்பு சாதம் சாப்பிடலாம்.

மதியம்:
மதியம் சாதம் சாப்பிடலாம், சாதத்தோடு பருப்பு, காய்கறி கூட்டு போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். விழா காலங்கள் என்றாலே பாயசம் சாப்பிடுவது நம் ஊர் வழக்கம் என்பதால் மதிய உணவுடன் பாயசம் சாப்பிடலாம்.

இரவு
இரவு உணவை பொருத்தவரை விழித்திருந்து முருகன் பாடலை துதிப்பாட இருப்பவர்கள் சப்பாத்தி உண்ணலாம். சீக்கிரமே படுக்க செல்பவர்கள் தயிர் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.

வைகாசி விசாகம் நாளில் முருகனை வேண்டி விரதம் இருப்பதால் காரமான, அசைவ உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.