1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 நவம்பர் 2022 (07:59 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி பின்னரே பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும்தான் ஆறு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva