செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்ததா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்தாலும் இலங்கை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயரவில்லை.
 
 இந்த நிலையில் இன்றும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உயரும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளை பொய்யாக்கும் வகையில் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.