புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (09:02 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் ஐந்து நாட்களில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு செல்லும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
மார்ச் 7ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவடையும் நிலையில் மார்ச் 8ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய்க்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது