சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது