வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:28 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது 
 
கடந்த 6 நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நிலையாக இருந்த நிலையில் இன்று ஏழாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 99.20 என்ற விலைக்கும் டீசல் விலை ரூபாய் 93.52 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு வருகிறது