1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today only 7 persons affected by corona virus

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்று 7 பேர்கள் மட்டுமே புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
தற்போது தமிழகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 79 என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
இன்று கொரோனா பாதிப்பு அடைந்த 7 பேர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு