திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (07:08 IST)

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.. மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்..!

Chennai Corporation
சென்னை மாநகராட்சியின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தாக்கல் செய்கிறார் என்றும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூட இருக்கும் நிலையில் மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாகவும் இதில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு  சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva