திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (17:19 IST)

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்..!

SK Prabakar
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.ஏஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தலைவர் பணியிடம் காலியாக, நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வரும் எஸ்.கே.பிரபாகர், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட  எஸ்.கே.பிரபாகர்,  2028 ஜனவரி மாதம் வரை பணியில் இருப்பார்.
 
கடந்த பிப்ரவரி மாதம் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.