1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (21:23 IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தேதி அறிவிப்பு

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அமல் படுத்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்து சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்தையும் வெற்றிகரமாக திறந்து வைக்கும் விழாவை நடத்தியுள்ளார் 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார். நாளை மறுநாள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த கூட்டத்தில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் குறிப்பாக கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது