1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (16:41 IST)

தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்த தடை தற்காலிக நீக்கம்

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கி மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.



 

 
மத்திய அரசு மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள முதல்வர் தடை சட்டத்தை பின்பற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் மட்டிறைச்சி தடையை எதிர்த்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் மாட்டிறைச்சிக்கான தடையை தற்காலிமாக நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு என்பது அடிப்படை உரிமை, அதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.