தமிழகத்தில் மேலும் 206 கோயில்களில் அன்னதான திட்டத்தை ஜெயலலிதா துவக்கிவைத்தார்


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (01:19 IST)
தமிழகத்தில் உள்ள 206 கோயில்களில் மேலும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.
 
 
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் பசியாறும் வகையில், மேலும் 206 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர்  ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
 
மேலும், பூஜை வசதி இல்லாத சுமார் 10,000 சிறு கோயில்களுக்கு தலா 2440 ரூபாய் மதிப்பிலான 5 பூஜைப் பொருட்களை கோயில் பூசாரிகளுக்கு வழங்கினார்.
 
அத்துடன், கோயில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 820 பணியாளர்களுக்கு  பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியத்திற்கான ஆணையை முதல்லர் ஜெயலலிதா வழங்கினார். 


இதில் மேலும் படிக்கவும் :