புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (19:27 IST)

சனி, ஞாயிறு நாட்களில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி!

ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையே மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி குவிக்க மார்க்கெட்டுகளில் கூட்டம் குவிந்து வருவதை அடுத்து சனிக்கிழமையும் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதை அடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். தனிமனித இடைவெளியை கண்டுகொள்ளாமல் மாஸ்க் அணியாமல் பலர் இருந்ததால் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது 
 
இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு தற்போது சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது