வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:03 IST)

திருமண மண்டபங்களில் மதுபானம்.. அரசாணையில் திருத்தம்..!

TN assembly
திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என இன்று காலை அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் அந்த அரசாணையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான அரசாணையில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது . இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மதுபானம் பரிமாறுவது தொடர்பான அறிவிக்கையில் திருமண கூடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கொண்டாட்டங்கள் விழாக்கள் விருந்துகளில் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வழங்கும் இடங்களில் திருமண படங்கள் இடம்பெற்ற தொடர்பாக அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்களை ஏற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Edited by Siva