அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
நாளை முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத் துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பஞ்சாயத்து சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது என்றும் தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.