1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (11:13 IST)

அமித்ஷாவை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: முக்கிய பேச்சுவார்த்தை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
வரும் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளார். திருப்பதியில் நடைபெற உள்ள தென் மாநில முதல்வர் மாநாட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ளப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின்போது அமித்ஷாவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனியாக சந்தித்து பேச உள்ளதாகவும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து முதல்வர் அவர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது