புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:28 IST)

ஆட்டோ டிரைவரின் ஆபாச ஆட்டம்: சீரியல் ரேப்பிஸ்ட் பிடியில் சிக்கிய பெண்கள்!

ஆட்டோ டிரைவர் ஒருவர் பெண்களை மிரட்டி பாலியல் இன்பங்களை அனுபதித்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் தொல்லை செய்து வந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
 
சேலத்தில் சேர்ந்த மோகன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளான். இரு ஆட்டோகளுக்கு உரிமையாளரான இவன், ஒரு ஆட்டோ இவனும் மற்றொரு ஆட்டோவை அவனது நண்பனிடமும் கொடுத்து ஓட்டி வந்துள்ளானன். 
 
இந்நிலையில், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருகிறான் என பெண் ஒருவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் மோகன்ராஜை கைது செய்துள்ளனர். இதன் பின்னர் போலீஸார் மோகன்ராஜின் மொபைக் போனை ஆராய்ந்த போது பல திடுக்கிடும் வீடியோக்கள் அதில் இருந்துள்ளது. ஆம், மோகன்ராஜ் இது போன்று புகார் அளித்த பெண்ணோடு சேர்ந்து 7 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி உள்ளான். 
 
அதாவது, தனது ஆட்டோவில் பயணிக்கும் பெண்களில் ஒரு சிலரை குறி வைத்து நல்லவ போல் பேச்சு கொடுத்து பெண்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை பெற்றுக்கொண்டு, அவர்களை நய்சாக வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு கடுமையாக மிரட்டி அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்வானாம். 
பின்னர் அவன் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களுக்கு போன் போட்டி வீடியோ வைத்து மிரட்டி தனது இச்சை இணங்கும்படி மிரட்டி, பாலத்காரம் செய்து வந்துள்ளான். அந்த பெண்களின் வீடியோவும் அவனது போனில் இருந்துள்ளது. 
 
அந்த 7 பெண்களில் 6 பேர் குடும்ப பெண்கள், ஒருவர் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவன் மட்டுமல்லாமல் இவனுடைய கூட்டாளி ஒருவரும் இது போல பல பெண்களை   பலாத்காரம் செய்து வந்ததாகவும் தெரிவந்துள்ளது. 
இதனால் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கைக்கு குந்தகம் வரமால் இருக்க இந்த வழக்கை கவனத்துடன் கையாண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் இந்த லீலைகள், சென்னையில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ சங்கரை நினைவு படுத்துவதகாவும் உள்ளது.