செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (11:44 IST)

சித்த வைத்தியம் பார்க்கும் ஸ்டாலின்: என்னமா நீங்க இப்படி பண்றீங்களே

ஸ்டாலினை வறுத்தெடுக்கும் துக்ளக் முகப்பு பக்கம்: என்னமா நீங்க இப்படி பண்றீங்களே!

அரசியலையும், அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பதில் துக்ளக் யாருக்கும் அஞ்சுவதில்லை. அந்த வகையில் இந்த வாரம் வெளியான துக்ளக் இதழின் முகப்பு பக்கத்தில் திமுக-வின் ஸ்டாலினையும், திமுக-வையும் மரண கலாய் கலாய்த்திருக்கிறார்கள்.


 
 
“திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பினரின் பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு” - ஸ்டாலின். என்று ஸ்டாலின் சொன்ன வாக்குறுதியை போட்டு அதனை 2014-இல் நடிகர் பரத் நடித்த ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைப்படத்தின் பெயரை, ஸ்டாலினுக்காக “இரண்டாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி” என மாற்றி திமுக-வை வறுத்தெடுத்துள்ளனர் துக்ளக் இதழின் மூலம்.
 
இதில் சித்தவைத்திய பரம்பரை புகைப்படமாக, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசுகளின் புகைப்படங்களை அதில் போட்டுள்ளனர். மேலும் அதில் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அதனை ரசிக்கும் படியாகவும், சிரிக்கும் படியாகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரில் வரும் மீம்ஸ்களை விட துக்ளக்கின் இந்த மீம்ஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதே போல் முன்னதாக ஒரு பாரளுமன்ற தேர்தலில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் முகத்தை கழுதை உடம்பில் பொறுத்தி, “எங்களை ஆதரியுங்கள் யோகம் வரும்” என்ற வசாகம் எழுதி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.