புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (17:34 IST)

மறு உத்தரவு வரும் வரை யாரும் கடையை திறக்க கூடாது: போலீஸ் கெடுபிடியால் மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தலைவிரித்து ஆடி வருகிறது. தினமும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒருநாள் மட்டுமே சிறிது ஆறுதலாக 38 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பார் என தெரிகிறது 
 
இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் பகுதி முழுவதும் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
எனவே மறு உத்தரவு வரும் வரை அந்த பகுதியில் யாரும் கடைகளை திறக்கக் கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியே வராமல் எப்படி இருப்பது என்று பொதுமக்கள் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுத்தே தீர வேண்டிய நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது