1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (10:38 IST)

குஜராத் தலித்; மாயாவதி விவகாரம்: திருமாவளவன் போராட்டம் அறிவிப்பு

குஜராத்தில் மாட்டுத்தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
அதேப்போல் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியை மிகவும் தரக்குறைவாக பாஜகவை சேர்ந்த தயா சிங் விமர்சித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த இரு விவகாரங்களையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த தயா சங்கர் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டாலும், இது தொடர்பாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
 
குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் மாயாவதி தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை கண்டித்து வரும் 25ம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.