1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 15 அக்டோபர் 2016 (14:51 IST)

அப்பல்லோ போனால் அதிமுக; டெல்லி போனால் பாஜகவா? - கடுப்பாகும் திருமாவளவன்

அப்பல்லோவுக்கு போனால் அதிமுக அணிக்கு தாவப் போகிறீர்களா? என்கின்றனர். டெல்லிக்கு போனால் பாஜக பக்கம் தாவப் போகிறீர்களா? என்கிறீர்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோபமாக பதிலளித்தார்.
 

 
இது தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நீங்கள் திடீர் என்று டெல்லி சென்றது ஏன்? கேள்விக்கு, ”மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றேன்.
 
தேசிய தலித் முன்னணி என்னும் அமைப்பின் சிறப்பு கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து பேசுவதற்காக சென்றேன். நான் அந்த அமைப்பின் துணை தலைவராக உள்ளேன். இந்த அமைப்பு கட்சிகளை கடந்து தேசிய அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
 
முதல் கலந்தாய்வு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ஏற்கனவே 2 கூட்டங்கள் டெல்லியில் நடந்துள்ளன. ஒரு கூட்டம் மும்பையில் நடந்தது. தற்போது நவம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய அளவில் தலித் இயக்க தலைவர்கள் கலந்து கொள்வார்கள்” என்றார்.
 
நீங்கள் பாஜக அணி பக்கம் தாவ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறதே? என்று கேள்விக்கு, ”அப்பல்லோவுக்கு போனால் அ.தி.மு.க. அணிக்கு தாவப் போகிறீர்களா? என்கின்றனர். டெல்லிக்கு போனால் பா.ஜ.க. பக்கம் தாவப் போகிறீர்களா? என்கிறீர்கள். தேர்தல் அரசியலை தாண்டி சிந்திக்க முடியாதவர்கள் தான் இப்படி விமர்சிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.