1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (03:54 IST)

கருணாநிதி வீட்டிற்கா திருடச் சென்றேன்? - துப்பாக்கி காட்டி மிரட்டிய திருடன் கைது

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் வீட்டில் பொம்மை துப்பாக்கியுடன் புகுந்த திருடனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் வீடு சிஐடி காலனியில் உள்ளது. இந்த வீட்டுக்குள் ஞாயிறன்று இரவு திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்ற நபர் புகுந்துள்ளார். அவரது கையில் துப்பாக்கி இருந்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் பார்த்தவுடன் ராஜேந்திர பிரசாத் துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். திருடுவதற்காக, நுழைந்த ராஜேந்திர பிரசாத், திங்களன்று மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளார்.

இதனையடுத்து வீட்டில் ஆட்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை உணர்ந்த அவர், துப்பாக்கியை காட்டி மிரட்டும்போது மாட்டிக்கொண்டு உள்ளார்.

இதனிடையே, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ராஜேந்திர பிரசாத்தை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தாம் திருடச் சென்றது கருணாநிதியின் வீடு என்பது, தனக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.